Shopping Cart
0 items
 
Featured
 

SPECIAL MESSAGE

SPECIAL MESSAGE
Click to enlarge
Price: Rs.150.00
Availability: 100
Model: MESSAGE
Average Rating: Not Rated

PLEASE VISIT www.arockyasanthai.net 

FOR UPDATE and CURRENT AVAILABLE PRODUCTS.

 

 
Advertisement

பதிவு செய்த நாள்

19மே
2015 
00:00
 

இரு ஆண்டுகளாக உடல்நல பாதிப்புஎதுவுமே இல்லை!இயற்கை விவசாயம் மற்றும் சிறுதானிய உணவு தயாரிப்பு பயிற்சியாளர் நாச்சாள்: எம்.எஸ்சி., எலக்ட்ரானிக் மீடியா படித்து, சிங்கப்பூரில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நான், இந்தியா திரும்ப தருணம் பார்த்த நேரத்தில், அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என, தகவல் வந்தது.இந்தியா திரும்பியபோது, என் அம்மாவுக்கு, 'ஆர்த்ரைட்டிஸ்' வந்து, எழுந்து நடமாட முடியாமல் இருந்தார். நிறைய மாத்திரை, மருந்து சாப்பிட்டும் சரியாகவில்லை. என் அம்மா தினமும், கீரை இல்லாமல் சாப்பிட மாட்டார். 
உணவே மருந்து எனும்போது, உண வால் ஏன் உடல் பாதிக்கப்படுகிறது என, ஆராய்ந்ததில், சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய், பொடி வகைகளில் கலப்படம், அரிசி, பருப்பு வகை உற்பத்தியில் செயற்கை உரங்கள் தான் காரணம் என, தெரிய வந்தது. அம்மாவுக்கு கொடுத்து வந்த அலோபதி மருந்துகளை நிறுத்தினேன். ஊரில் இருந்த, இயற்கை உரங்களை பயன்படுத்தி விளைவித்த அரிசி, பருப்பு, சர்க்கரை வகைகளை அனுப்பச் சொல்லி, சமைத்து சாப்பிட்ட போது, கொஞ்சம் முன்னேற்றம் தெரிந்தது.அம்மாவுக்கு மட்டுமின்றி, எங்கள் குடும்பத்தினரும் பயன்
படுத்த ஆரம்பித்தோம். மருந்துக்கும், டாக்டருக்கும் கொடுக்கும் காசை, ஆரோக்கியமான உணவுக்கு செலவிட்டதால், உடல்நல குறைபாடுகளுக்கு ஒரு முடிவு வந்தது. கிட்டத்தட்ட ஆறேழு ஆண்டுகளாக, எந்த மருந்தும் அம்மா எடுக்கவில்லை.இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காரணமாக, மாடித் தோட்டமும் வைத்துள்ளேன். மாப்பிள்ளை சம்பா, கருங்குறுவை அரிசியில் சமைத்து உணவு சாப்பிடும் போது, அது பசியை அதிகம் துாண்டாது. அத்துடன் காய்கறி கூட்டு, பொரியல்ன்னு மதியம் ஒருவேளை மட்டும், நிறைவாக உணவு எடுத்துக் கொள்வேன். 
இரவு, பெரும்பாலும் பசிக்காது. பசித்தாலும், பழங்கள் எடுத்துக்குவேன். இப்போது, பயிற்சி வகுப்புகள், பயணங்கள் செய்வதால், காலையில் கேழ்வரகு, கம்பில் செய்த கஞ்சி அருந்துகிறேன்.நெய் இல்லாமல் நான், மதிய உணவை எடுத்துக் கொள்வதில்லை. அடுத்து, பனங்கருப்பட்டி, இந்துப்பு, புளிக்கு பதிலாக தக்காளி, மிளகாய்க்கு பதில், மிளகு தான் பயன்படுத்துகிறேன். அதேமாதிரி, சமையலுக்கு செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் தான்; தலைக்கும் அது தான். 
மண்சட்டி சமையலும், என் உணவில் கட்டாயம், ஏதாவது ஒரு கீரையும் இருக்கும். குளிர்சாதன பெட்டியில் எந்த காய்கறிகளையும் வைப்பதில்லை. தண்ணீரும் கூட சாதாரண போர் வாட்டர் தான். காய்ச்சிய நீர் அருந்தும் பழக்கமெல்லாம் இல்லை. வெளியே சென்றாலும், ஓட்டலில் சாப்பிடுவது இல்லை. இந்த இரண்டு ஆண்டில், காய்ச்சல், தலைவலி, இருமல், சளி என, எதுவுமே வந்ததில்லை.

 

 

SAVE 50% Using Best & Qualitative

PATANJALI Products.

2 to10 times Cheaper as Compared to

Multi-National Companies.

NOW AVAILABLE

AT

AROCKYA SANTHAI WELLNESS COMPLEX

PLOT NO.7,MUGALIVAKKAM MAIN ROAD,MADHANANDAPURAM,

MUKALIVAKKAM,CHENNAI-600125.

Ph:9789999333,9710999333,9952071525

 

****************************************************************************************************************************************

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
Write Review
Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad            Good

Enter the code in the box below:

There are no additional images for this product.