ஆவாரம் பூ
மேனியழகு தொடங்கி புற்றுநோய்க்கும் சிறந்த மருந்தாக இருக்கும் அற்புத பூ இந்த ஆவாரம் பூ. ஆவாரம்பூவின் பட்டை, வேர், இலை என அனைத்தும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்ககூடியது.

தங்கத்தை போன்று பளிச்சிடும் ஐந்து இதழ்கள் கொண்ட மஞ்சள் நிறப் பூக்களையுடைய அழகிய குறுஞ்செடி ஆவாரம் செடி. மெல்லிய தட்டையான காய்களையுடையது. விதைகள் காமத்தை பெருக்கக்கூடியது. தமிழகத்தில் எல்லா இடங்களிலும் தானாக வளரக்கூடிய செடிவகை. ஆடி மாதத்திற்குப்பின் பூக்கத் தொடங்கும் செடி இந்த ஆவாரம் பூ செடி. பெரும்பாலனவர்கள் பூஜைக்காக பயன்படுத்துவதுண்டு.

தைதிருநாள் பொங்கல் பண்டிகைக்கும் வீடுகளில் இந்த ஆவாரம் பூக்களை தமிழர்கள் வைத்து வழிபடுவதுண்டு. இதனுடைய இலை, பூ, பட்டை, வேர், பிசின், காய் ஆகிய அனைத்து பகுதிகளும் மருத்துவ பயனுடையவை. அதிலும் பூக்கள் அதிகளவு மருத்துவகுணம் கொண்டது.

மேனியழகு தொடங்கி புற்றுநோய்க்கும் சிறந்த மருந்தாக இருக்கும் அற்புத பூ இந்த ஆவாரம் பூ. ஆவாரம்பூவின் பட்டை, வேர், இலை என அனைத்தும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்ககூடியது.

முக அழகு

முகம் அழகாக இருக்க வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்குமே இருக்க தான் செய்யும். அதிலும் பெண்களுக்கு இந்த எண்ணம் எப்போதும் மேலோங்கி இருக்கும். முகம் பொலிவு பெற ரசாயனங்கள் கொண்ட களிம்புகளை முகத்திற்கு பூசுவதை விட காய்ந்த ஆவாரம் பூ பொடியை சிறிதளவு எடுத்து, பசுந்தயிரில் போட்டு அரைத்து முகத்திற்கு பூசி, சிறிது நேரம் கழித்து முகம் கழுவி வந்தால் முகத்தில் இருக்கும் வடுக்கள், எண்ணெய் தன்மை போன்றவை நீங்கி, முகம் அழகு பெரும்..

தங்கச்சத்து

ஆவாரம் பூ என்பது தங்கச்சத்துள்ளது என்பதால் தங்கத்திற்கு சமமாக கருதப்பட்டு பூ. சாதாரணமாக தங்க பஸ்பத்தின் விலையும் அதிகம். தங்கத்தின் விலையும் அதிகம். உடலில் ஏற்படும் சிறுநீர் பாதைகளில் ஏற்படும் தொந்தரவுகளுக்கு சிறந்த மருந்தாக இருக்கக்கூடியது இந்த பூக்கள்.

அன்றாடம் இந்த ஆவாரம் பூக்களை உட்கொள்வதால் மேனியே தங்க நிறத்திற்கு மாறும் என்றால் அதனை மறுக்க முடியாது.

சிறுநீரக தொற்று

சிறுநீரக தொற்று, பாதுகாப்பற்ற உடலுறவு மற்றும் அந்தரங்க உறுப்புகளின் சுகாதாரமின்மை போன்ற காரணங்களால் சிறுநீரக தோற்று நோய் ஏற்படுகிறது. இந்த பாதிப்புகள் உடலில் இருந்து அவ்வளவு சுலபத்தில் நீங்காது. ஆனால் இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவாரம் பூவிலிருந்து செய்யப்படும் ஆவாரம் பூ சாறினை அருந்தி வந்தால் சிறுநீரக தொற்று நோய்கள் விரைவில் நீங்கும்.

உடல் உஷ்ணம் குறையும்

உடல் உஷ்ணத்தால் ஏற்படும் பல நோய்களுக்கு சிறந்த தீர்வை இந்த ஆவாரம் பூக்கள் அளிக்கிறது.

மேகவேட்கை, தேக உடசூடு, உடல் நாற்றம், உடலில் உப்பு பூத்தல், வறட்சி, ஆயாசம், மலச்சிக்கல், மூலம், கண் எரிச்சல் என பலவற்றை நீக்கும். உடலுக்கு பலத்தை தரும்.

ஆவாரம் பூ குடிநீரை தவறாமல் குடித்து வந்தால், உடல் குளுமை அடையும். உஷ்ணம் நீங்கும்.

ஆவாரம் பூவை ஊறவைத்து, குடிநீர் தயாரித்து அருந்தினால் நாவறட்சி நீங்கும். கண் எரிச்சல் நீங்கும்.

காலை, மாலை, அரை தேக்கரண்டி பசு நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூலநோய் குணமடையும்.

பூச்சூரண்த்தையோ, பூவைக் குடிநீராக்கிப் பாலில் கலந்தோ, இதழ்களைக் கறிக்கூட்டாகவோ நாள் தோறும் பயன் படுத்த மேக வெட்டை, தேக உட்சூடு, உடல் நாற்றம், உடலில் உப்புப் பூத்தல் வரட்சி, ஆயாசம் நீங்கும். உடலுக்குப் பலத்தைத் தரும், தேகம் பொன்னிறமாகும்.

நீரிழிவு

நீரிழிவு நோய்க்கு ஆவாரம் பூ ஒரு அற்புத மருந்தாகும். சர்க்கரை நோயாளிகளுக்கு வரக்கூடிய பாத எரிச்சல், மதமதப்பு, மூட்டுவலி, அதிக தாகம், நரம்பு தளர்ச்சி, சிறுநீரக கோளாறு என அனைத்திற்கும் ஆவாரம் பூ (கஷாயம்) குடிநீர் ஒரு நல்ல மருந்து.

ஆவாரம்பூக்களையும், கொழுந்தையும் சேர்த்து வெயிலில் காயவைத்து தூள் செய்து, அதில் நீர் ஊற்றி, அடுப்பில் வைத்து கஷாயம் இறக்கி பால் சேர்த்து பருகி வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும். ஆவாரம் பூக்களை சேகரித்து, பாசிப்பருப்புடன் சேர்த்து, சமைத்து சாப்பிட்டால் சர்க்கரை நோயின் தாக்கம் குறையும்.

ஆவாரம் பூக்களை பறித்து காயவைத்து, பின்பு சிறிது சுத்தமான நீரை அடுப்பில் வைத்து, அதில் நிழலில் உலர்த்தப்பட்ட்ட ஆவாரம் பூக்களை போட்டு, நன்கு கொதிக்க வைத்து, அந்நீரை வடிகட்டி பனங்கற்கண்டை சிறிதளவு சேர்த்தால் ஆவாரம் பூ தேநீர் தயார்.

இத் தேநீரை தினமும் நீரிழிவு நோயாளிகள் பருகி வந்தால் நீரிழவு நோய் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். உடலுக்கும் பலத்தை கொடுக்கும். பனங்கற்கண்டு மற்றும் வேறு எந்த இனிப்புகளும் சேர்க்காமலும் இத்தேனீரை பருகலாம்.

ஆவாரம்பூ, அதன் பட்டை, பனங்கல்கண்டு, வால் மிளகு, ஏலக்காய் சேர்த்து தண்ணீர் விட்டு பாகு போல் காய்ச்சி, அதில் பால் கலந்து குடித்து வர, உடம்பு வலுவடையும். சர்க்கரை நோயும் கட்டுக்குள் அடங்கும்.

நீர் வறட்சி வெப்பம் அதிகம் உள்ள காலங்கள் மற்றும் உடலுக்கு சில வகை நோய் பாதிப்புகள் ஏற்படும் காலங்களில் உடலில் நீர் சத்து வறண்டு நீர் வறட்சி ஏற்படும். இக்காலங்களில் ஆவாரம் பூ ஊற வைக்கப்பட்ட நீர் அல்லது ஆவாரம் பூ போட்டு காய்ச்சி வடிகட்டி ஆறிய நீரை பருகி வந்தால் உடலில் ஏற்படும் நீர் வறட்சியை போக்கலாம்.

கூந்தல் வளர்ச்சி

முடியுதிர்வு, இளநரை போன்ற பிரச்சனைகளுக்கு ஆவாரம் இலைகள், பூக்கள் சிறந்த தீர்வளிக்கிறது. ஆவாரம் இலைகளை அரைத்து தலைக்கு தேய்த்து குளித்துவர முடிஉதிர்வு தடுக்கப்படும். கூந்தல் கருகருவென்று அடர்த்தியாக வளரத்தொடங்கும். இதனைக்கொண்டு எண்ணெய் தயாரித்து பயன்படுத்தலாம். சீயக்காய் சேர்த்து கூந்தல் குளியல் பொடி தயாரித்தும் பயன்படுத்தலாம்.

ஆவாரம் பூ 100 கிராம், வெந்தயம் 100 கிராம், பயத்தம்பருப்பு அரை கிலோ ஆகியவற்றை கலந்து மெஷினில் அரைத்துக் கொண்டு அதனை தேவையான அளவு எடுத்து வெந்நீரில் கரைத்து வாரம் இருமுறை தலைக்கு அலசி வர, கருகருவென கூந்தலை பெறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *