உங்கள் ஜாதக கட்டத்தில் நவகிரகங்கள் சரியான இடத்தில் அமர்ந்திருந்தாலும் கூட, உங்களது வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பே இல்லை. இந்த தவறுகளை நீங்கள் செய்தால்!👇

நம்முடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய சுக துக்கங்களுக்கு, நல்லவை கெட்டவைகளுக்கு, ஜாதக கட்டங்களும், அதில் அமர்ந்திருக்கும் நவகிரகங்களும் தான் காரணம் என்று சொல்கிறது ஜோதிடம். இருப்பினும்,

சில பேருக்கு ஜாதக கட்டத்தில் எந்த தோஷமும் இல்லை. எந்த பிரச்சனையும் இல்லை.

ஆனாலும், கிரகங்களின் அனுகிரக பார்வை கிடைக்கவில்லையே!

அது எதனால்?

நல்ல ஜாதகத்தை கொண்டவர்களும், வாழ்க்கையில் ஒரு சில கட்டங்களில்,

கஷ்டப் படுவதற்கு என்ன காரணம்,

என்ற உண்மையை நீங்கள் தெரிந்து கொண்டால், நிச்சயமாக வியப்பில் மூழ்கி விடுவார்கள்!

இது கூடவா,
ஒரு காரணம் என்ற அளவிற்கு உங்களையே ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும்,

அந்த காரணம் என்ன?

தினம்தோறும் நம்முடைய வாழ்க்கையில் நாம் செய்யக்கூடிய தவறு என்ன?

என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

எவர் ஒருவர் தங்களுடைய சொந்த பந்தங்களை மதிக்காமல் அலட்சியமாக மரியாதை குறைவாக நடத்துகிறார்களோ,

அவர்களுக்கு நவகிரகத்தின் ஆசீர்வாதமும், அனுக்கிரஹமும் கட்டாயம் கிடைக்கவே கிடைக்காது.

இப்படியாக சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? நம்ப மாட்டீங்கன்னு தெரியும்.

சாட்சியோடு சொன்னா நம்புவீங்களானு பாப்போம்?

எந்த கிரகத்துக்குரிய சொந்த பந்தம் எது என்பதையும் பார்த்துவிடலாம்.

👇👇👇👇👇👇

உங்களுடைய அப்பாவை நீங்கள் மரியாதையாக நடத்தவில்லை என்றால்,

அப்பாவிற்கு கொடுக்க வேண்டிய ஸ்தானத்தை அவருக்கு நீங்கள் கொடுக்கவில்லை என்றால்,

உங்களுக்கு திருமணம் தள்ளிப்போகும்.

வேலைவாய்ப்பில் பிரச்சனை ஏற்படும். சொந்த தொழில் முன்னேற்றம் ஏற்படாது.

ஏனென்றால், அப்பா ஸ்தானத்தை குறிப்பது சூரியன்.

உங்களுடைய அம்மாவை நீங்கள் மதிக்கவில்லை என்றால்,

அவர்களை மரியாதை குறைவாக நடத்தினால்,

அவர்களை அவமானப்படுத்தி பேசினால்,

கட்டாயம் உங்களின் அழகு குறைய ஆரம்பிக்கும்.

அறிவாற்றல் மங்கிப் போகும்.

குழப்பமான வாழ்க்கை வாழத் தொடங்குவீர்கள்.

மனநிம்மதியே இருக்காது. ஏனென்றால், அம்மா ஸ்தானத்தை குறிப்பது சந்திரபகவான்.

நீங்கள் கணவனாக இருந்தால்,
உங்கள் வீட்டில் இருக்கும் மனைவியை மரியாதையோடு தான் நடத்த வேண்டும்.

மனைவிக்கு மரியாதை இல்லை என்றால்,
உங்கள் வீட்டில் மகாலட்சுமி இல்லை.

வீடு, மனை, வாகனம், சொத்துபத்து சந்தோஷமான வாழ்க்கை, எல்லாவற்றையும் நீங்கள் பெற வேண்டுமென்றால், மனைவிக்கு மரியாதை கொடுக்கவேண்டும்.

மனைவி இடத்தை குறிப்பது சுக்கிரன்.

நீங்கள் மனைவியாக இருந்தால் உங்களுடைய கணவருக்கு கட்டாயம் மரியாதை கொடுக்கவேண்டும். உங்கள் கணவர் இடத்தை குறிப்பது குரு.

உங்கள் வீட்டில் நிம்மதியான சூழ்நிலை நிலவ, சந்தோஷம் நிலைத்திருக்க கட்டாயம் மனைவிமார்கள், கணவனை மதிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தாய்மாமன் ஸ்தானத்தை குறிப்பவர் புதன் தாய்மாமன் மட்டுமல்ல,
அத்தை ஸ்தானத்தையும் குறிப்பதும் புதன் பகவான்.

உங்களது குழந்தைகள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றால், தாய்மாமன்,
அத்தை போன்ற சொந்த பந்தங்களை மதிப்போடு நடத்த வேண்டும்.

சகோதர சகோதரிகளை இழிவாகப் பேசினால், செவ்வாய் பகவானின் அனுக்கிரகம் கிடைக்காது.

உங்களால் ஆடம்பர பொருட்களை வாங்கி, நிலம் வீடு போன்ற சொத்துக்களை வாங்கி, கட்டாயம் சேர்க்க முடியாத. வாழ்க்கையில் முன்னேற்றம் தடைபடும்.

இது உங்களுடைய சகோதர சகோதரிகளுக்கும் பொருந்தும்.

கணவனாக இருந்தால், மனைவியின் சகோதரர் சகோதரிகளையும் மதிக்கவேண்டும்.

மனைவியாக இருந்தால் கணவரின் சகோதர சகோதரியையும் மதிக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக பாட்டிமார்களும் தாத்தாக்களும்.

இவர்கள் இல்லை என்றால் நம்முடைய வாழ்க்கையில் நல்லது கெட்டது சொல்வதற்கு ஆளே கிடையாது.

அதாவது, ராகு கேதுவிற்கு உரியவர்கள் இவர்கள்.

ஆகவே, இவர்களை மிகவும் மரியாதையோடு நடத்த வேண்டும்.

முதியவர்களை கஷ்டப்படுத்தினால், நாமும் வாழ்க்கையில் கஷ்டப்பட வேண்டியதுதான்.

இப்போதாவது நம்புவீர்களா கஷ்டம் எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்று!

ஆக மொத்தம் உறவினர்களுக்குள் ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும்
சண்டை போட்டாலும் ஓருவருக்கொருவர்
பார்க்காமல் பேசாமல் இருப்பதை
தவிர்த்து அவர்களுடன் அன்புடன்
பழகி அவர்களையும் சந்தோஷப்படுத்தி
அதன்மூலம் நாமும் சந்தோஷமாய் வாழ்வோம்.

நவகிரகங்களும் சந்தோஷப்பட்டு நம் தோஷங்களை
களைந்து நமக்கு சந்தோஷத்தைக் கொடுப்பார்கள்..! இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடனும், நலமுடனும்.👌🙏🙌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *