வாரம் ஒரு மூலிகை – பிரண்டை- PIRANDAI

ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும். மாத்திரைகள் இல்லாமல் மருத்துவர் உதவி இல்லாமல் என்று நினைப்பவர்கள் பாரம்பரிய உணவு முறையைக் கடைப்பிடித்தால் போதும்.

மூலிகை பொருள்களை யும் உணவாக்கி அதையே உடலுக்கு மருந்தாக்கி வாழ்ந்த நம் முன்னோர்கள் பயன்படுத்திய பொருளில் முக்கி யமானவை பிரண்டை.

பிரண்டை என்றால் என்ற கேள்விக்கு இடமில்லாமல் மருத்துவர்களும் இன்று பிரண்டையின் முக்கியத்து வத்தை உணர்த்துவதாலோ என்னவோ மக்கள் பிரண்டையை நோக்கி படையெடுக்கதொடங்கியிருக்கிறார் கள்.

சாதாரணமாக பத்துரூபாய்க்கு கிடைக்கும் பிரண்டையின் பயன் பலநூறு நோய்களை வரவிடாமல் தடுக் கும் என்கிறார்கள் முன்னோர்கள். பிரண்டையில் என்னவெல்லாம் இருக்கு என்பதை தெரிந்துகொண்டால் இனி உங்கள் வீட்டிலும் வாரம் ஒரு முறை பிரண்டை சமையல் இருக்கும்.

அழகும் ஆரோக்யமும் வஞ்சமில்லாமல் தரும் மஞ்சள் பிரண்டை அறிவோம் இதற்கு வஜ்ரவல்லி என்ற பெயரும் உண்டு. சாதாரண பிரண்டை, உருட்டுப்பிரண்டை, தட்டைப்பிரண்டை, முப் பிரண்டை என்று பல வகைகள் இருந்தாலும் நான்கு பட்டைகளைக் கொண்ட பிரண்டைதான் நாம் அதிகம் காண்கிறோம். இதைத் தான் நாம் உபயோகப்படுத்துகிறோம்.

பிரண்டையின் கனிகள் சிவப்பு நிறத்தில் உருண்டையாக இருக்கும். விதைகள் வழவழப்பாக இருக்கும். பூக் கள் மஞ்சள் நிறத்திலும் இருக்கும். இதை வளர்ப்பதற்கு அதிக மெனக்கெடல் வேண்டியதில்லை. ஒரு பற்றை எடுத்துவந்து வைத்தால் போதும் அவை வேகமாக கொடி போல் பற்றிக்கொண்டு வளரும்.

பிரண்டையின் சாறு உடலில் பட்டால் நமைச்சலும், அரிப்பும் உண்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது. பிரண் டையின் வேரும் தண்டும் மருத்துவப்பயன்களை உள்ளடக்கியது. பிரண்டை ஆயுர்வேத மூலிகை என்று அழைக்கப்படுகிறது வாயுக்களை விடுவிக்கும். வாயுக்கள் அதிகமாகும் போது நமது உடலில் இருக்கும் எலும்புகள் சந்திக்கக்கூடிய பகுதிகளில் தேவையற்ற நீர் தேங்கிவிடும். இவை உடலில் வலிகளை உண்டாக்கும். இந்த நீர் தான் வாயு நீர் என்றழைக்கப்படுகிறது. இவை முதுகுத்தண்டு வழியாக இறங்கி சளியாக மாறி பசைபோல் கழுத்துப் பகுதி வழியாக இறங்கி வழி யெங்கும் இறுகி முறுக்கும்.

இதனால் தீவிர கழுத்துவலி, முதுகுவலி, கால்வலி போன்ற உபாதைகள் உண்டாகும். பிரண்டையைத் துவை யலாக்கி சாப்பிடுவதன் மூலம் இந்த வாயுநீர் வெளியேறும். மேலும் வாயு நீர் சேராமல் தடுக்கும். வளரும் பருவத்திலேயே குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் அவர்கள் வலுவான உடலை பெறுவார்கள்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *