Arockyasanthai

இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்பட்ட உணவுப் பொருள்களுக்கு மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் மவுசு கூடிக்கொண்டே இருக்கிறது. இதனால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் புதிது புதிதாக இயற்கை அங்காடிகளும், இப்பொருள்களுக்கான பிரத்யேக சந்தைகளும் உருவெடுத்துக்கொண்டே இருக்கின்றன. ஆனால், மக்களின் நம்பிக்கையைப் பெற்று, திறம்படச் செயல்படக்கூடியவை மட்டுமே நிலைத்து நிற்கின்றன. அந்த வகையில்தான், சென்னை, முகலிவாக்கம் பகுதியில் கடந்த 14 ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி வரும் ‘ஆரோக்கியச் சந்தை’ கவனம் ஈர்க்கிறது.

ஆரோக்கியச் சந்தை என்ற பெயரை உச்சரித்தவுடனே... ஒரு மைதானம் அல்லது வீதியில் வரிசையாகச் சிறு கூடாரங்கள் அமைந்திருக்கும் காட்சிதான் எல்லோருக்கும் கண்முன் தோன்றும். ஆனால், சென்னை முகலிவாக்கத்தில் செயல்படும் ஆரோக்கியச் சந்தை, பக்கா சூப்பர் மார்க்கெட் அமைப்பில் இருக்கிறது.