RED CHILLI GARLIC APPALAM 90gm
search
  • RED CHILLI GARLIC APPALAM 90gm
  • RED CHILLI GARLIC APPALAM 90gm
  • RED CHILLI GARLIC APPALAM 90gm
  • RED CHILLI GARLIC APPALAM 90gm

RED CHILLI GARLIC APPALAM 90gm

₹70.00
Tax excluded

Quantity

  Security policy

(edit with the Customer Reassurance module)

  Delivery policy

(edit with the Customer Reassurance module)

  Return policy

(edit with the Customer Reassurance module)

நமது பாரம்பரியமான உணவுப் பொருட்களை அதன் உண்மையான ருசி, மணம், மற்றும் சத்துக்களுடன் அப்படியே மீட்டெடுக்க வேண்டும் என்ற பெரும் விருப்பம் மற்றும் ஆசையால் உருவாக்கப்பட்டது iTrust Food Factory.

நாங்கள் முதலில் அப்பளத்தை தேர்ந்தெடுத்தோம். அப்பளம் சுமார் 100 வருடங்களுக்கும் மேலான பாரம்பரிய உணவுப்பொருள் என்பது நிச்சயம்.

அப்பளம் செய்வதில் புகழ்பெற்ற கல்லிடைக்குறிச்சியில் சன்னதித்தெரு, தங்கம்மாள்புரம், வைத்தியபுரம், வீரபுரம் மற்றும் பல ஊர்களில் பாரம்பரியமாய் வீடுகளில் தங்கள் தேவைக்கு மட்டும் அப்பளம் செய்து கொள்பவர்களில் அனுபவமிக்க பெரியவர்களிடம் ருசிமிக்க உண்மையான அப்பளம் செய்யும் நுட்பங்களை கேட்டறிந்தோம்.

அதேபோல் மதுரை, சென்னையில் அப்பளம் செய்வதில் அனுபவமிக்க தொழில் கலைஞர்களிடம் , நேர்த்தியான அப்பள தயாரிப்பு பற்றி கேட்டறிந்தோம்.

இறுதியில் 94 வயது ராஜம் என்கிற அம்மையாரை சந்தித்தோம். மிக வசதியான குடும்ப சூழலில் கல்லிடைக்குறிச்சியில் பிறந்து மதுரையில் வாழ்க்கைப்பட்டவர். அவர் கூறிய அப்பளம் தயாரிக்கும் மிக நுட்பமான செய்முறைகள் எங்கள் அப்பளம் தயாரிக்கும் கனவை கச்சிதமாய் நிறைவேற்றும் என்று அறிந்தோம்.

நமது ஊர் நாட்டு உளுந்து தேர்வு செய்வது முதல் அதை மாவாக்கி, பிசைந்து, உலக்கையால் இடிக்கும் நுட்பம்-இடிக்கும் போது வரும் ஓசையின் மூலம் மாவின் சரியான பதம் கண்டறியும் நுட்பம்-அப்பளத்தை காயவைத்து எடுப்பது என்பது வரை அற்புதமான மறக்க முடியாத விளக்கமளித்தார். அம்மையாருக்கு என்றும் நன்றிகடன் பட்டவர்கள் நாங்கள்!.

அம்மையார் கூறிய நுட்பங்களை பின்பற்றி 100% சோடா இல்லாமல் நமது நாட்டு உளுந்து மட்டும் உபயோகித்து, இயற்கையான பாரம்பரிய கைபக்குவ முறையில் அதிபன் அப்பளம் தயாரிக்கப்படுகிறது.

நமது பாரம்பரிய உணவுப்பொருளான அப்பளத்தின் உண்மையான ருசி, மணம் மற்றும் சத்துக்களை உண்டு மகிழ்வீர்.

தரமான நல்ல பொருள்களை மக்களிடம் கொண்டு சேர்பதையே விற்பனை என்று நங்கள் அர்த்தப்படுத்தி கொண்டுள்ளோம்.

நல்லவை உண்டு நலமுடன் வாழ்வீர்.

25 Items
Comments (0)
No customer reviews for the moment.